“ ஸ்ரீ ஐயப்பன்திருக்கோவில் “
55,பெருமாள் கோவில் வடக்குமாட வீதி, வில்லிவாக்கம், சென்னை-49
முன்னுரை : இன்றைய தினம் சென்னை வில்லிவாக்கம் பெருமாள் கோவில் வடக்குமாட வீதியில் ஏழுந்தருளி ஆருள்பாலிக்கும் “ ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் “ ஊருவான வரலாறு .
" ஸ்ரீ ஐயப்ப பக்தஜன சபை'' ஓரு இடம் வேண்டுமென்று சபையினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி வில்லிவாக்கம் பெருமாள் கோவில் வடக்குமாட வீதியில் மூன்று கட்டமாக மூன்று காலகட்டங்களில் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளின் பெயரில் ஓரே இடத்தில் 2790 ச.ஆடி நிலம் வாங்கப்பட்டது. மேற்படி இடத்தில் ஓரு பஜனை மடம் உருவாக்கப்பட்டு குருசாமி திரு ஈ.ச. சுகுமாரன் அவர்களால் பூஜைகள், வழிபாடுகள் துவங்கின. நாளடைவில் சபையினரின் மனதில் மேற்படி பஜனை மடத்தை கோவிலாக கட்ட வேண்டுமென்ற உன்னதமான ஆசை தோன்றின. ஆசையை செயலாக்க, முதற்கட்டமாக ஸ்ரீ ஐயப்பன் விக்ரகத்தை செய்யலாமென தீர்மானிக்கப்பட்டு, விக்ரகம் ஆகம விதிப்படி கருங்கல்லினால் செய்ய முடிவு செய்து, அதன்படி மகாபலிபுரத்திலுள்ள சிற்ப கலை வல்லுனர் பேராசிரியர் திரு வன்மைநாதன் ஸ்தபதியாரிடம் செய்யும் பொறுப்பை ஓப்படைத்து, நல்லதொரு நாளில் சுபமுஹூர்த்த வேளையில் திரு கணபதி ஸ்தபதி அவர்களால் விக்ரகம் ஊருவாக்கப்பட்டு 12-12-1980 ல் பஜனை மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. குருசாமி ஈ.ச. சுகுமாரின் ஓரே ஆசை திருக்கோவில் முழுமையும் கருங்கற்களினால்தான் கட்டவேண்டும். ஆனால் அன்றைய தினம் சபையில் இருந்தவர்களெல்லாம் சாதாரணமானவர்கள்தான். ஆனாலும் யாரும் பின் வாங்காமல் குருசாமி ஈ.ச. சுகுமாரன் எண்ணப்படி கருங்கற்களினாலேயே கட்டலாம், அதற்கு முன்பாக முறைப்படி திருக்கோவில் அமைக்கும் பொறுப்பையும், தள நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் கேரள மாநிலம் காணிப்பையூர் கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களை கொண்டு இருக்குமிடத்தில் மும்மூர்த்திகளுக்கும் (ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ முருகன்) ஆலயம் அமைக்கும் வரைபடம் தயாரிக்கப்பட்டு திருப்பணி முறைப்படி தொடங்கப்பட்டது. குறிப்பாக செய்துவைத்திருந்த மூர்த்திக்கு ஏற்ற வகையில் திருக்கோவில் அமைக்க ஏற்பாடானது. திருக்கோவில் அமைக்கும் பொறுப்பை தென்காசியை சேர்ந்த திரு கோமதி சங்கர் ஸ்தபதி குழுவினரால் தொடங்கப்பட்டது.
விநாயகருக்கு தன்னுடைய செலவில் கோவில் கட்டும் பொறுப்பை அன்றையதினம் சபையிலிருந்த மூத்த உறுப்பினரான திரு ட. சக்திவேல் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவருடைய சொந்த செலவில் வில்லிவாக்கம் திரு நடராஜ ஸ்தபதி அவர்களால் விநாயகர் கோவில் திருப்பணி செய்து முடிக்கப்பட்டது. விநாயகர் விக்ரகத்தை மேற்படி தென்காசி திரு கோமதி சங்கர் ஸ்தபதி அவர்களால் உருவாக்கி கொடுக்கப்பட்டது. விநாயகர் கோவிலுக்குண்டான மொத்த செலவுகளையும் திரு ட. சக்திவேல் அவர்களே ஏற்றுக்கொண்டு முடித்துக் கொடுத்தார்.அடுத்ததாக திரு பாலமுருகன் ஆலயத்தை, தங்களது சொந்த செலவில் கட்டிக் கொடுக்கும் பொறுப்பை பாடியை சேர்ந்த திரு. இ. தயாளன் அவர்களின் குழுவினர்களால் திருக்கோவில் திருப்பணிகள் செய்து தரப்பட்டது. மேற்படி பாலமுருகன் விக்ரகம் செய்துதரும் பொறுப்பையும், கோவில் கட்டித்தரும் பொறுப்பையும் திரு கோமதி சங்கர் ஸ்தபதி அவர்களால் செய்விக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகவான் ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் முழுமையும் கருங்கல்லினாலேயே அமைக்க வேண்டும் என்ற ஏகோபித்த முடிவின்படி திருச்சியிலிருந்து கருங்கல், பாறைகள் கொண்டுவரப்பட்டு, கோவிலுக்கான வரைப்படம் படி வடிவமைக்கப்பட்ட, திருக்கோவில் திருப்பணிகள் அனைத்தும் தென்காசி திரு கோமதி சங்கர் ஸ்தபதி அவர்களின் குழுவினரால் திருக்கோவில் பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
திருக்கோவில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று குடமுழுக்கு செய்வதற்கான நாள் நிர்ணயிக்கப்பட்டு, நல்லதொரு நாளில் 14-07-1994 அன்று சபரிமலையின் தலைமை தந்திரி ப்ரம்மஸ்ரீ திருமேனி நீலகண்டரு அவர்களால் முறைப்படி குடமுழுக்கு விழா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், செயலாளர் திரு சீனிவாசன், திரு மீனாட்சி சுந்தரம், திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர்கள் முன்னிலையில் தாழமண்மடம் தலைமை தந்திரி திரு நீலகண்டரு அவர்களின் தலைமையில் வேத விற்பன்னர்கள் கூடி யாகங்கள் செய்விக்கப்பட்டு குடமுழுக்கு நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக செய்விக்கப்பட்டது. மேற்படி திருக்கோவிலின் செயல்பாடுகள் அனைத்தும் ஸ்ரீ சபரிமலை திருக்கோவிலில் நடைபெறுவது போன்றே கேரள சம்பிரதாயப்படி சபரிமலை தலைமை தந்திரி திரு நீலகண்டரு அவர்களால் நியமிக்கப்பட்ட நம்பூதிரிகளால் இன்றைய தினம் வரை பூஜைகள் நடைபெற்றுவருகின்றது. திருக்கோவிலில் முதல் முதலாக மேல்சாந்தியாக பொறுப்பேற்று பூஜை செய்தவர் ஸ்ரீ சபரிமலையில் மேல்சாந்தியாக பணியாற்றிய திருமேனி நாராயண நம்பூதிரி ஆவார். சடாதாரப் பூஜை செய்து பிரதிஷ்டை செய்த ஓரே கோவில் என்ற பெருமை வில்லிவாக்கம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலுக்கு மட்டுமே ஊண்டு.
ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பனுடன் இருந்து அருள்பாலிக்கும் உப மூர்த்திகள், சிவன், ராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சனேயர், நாகம், நவக்கிரகங்கள், புவனேஸ்வரி அம்மன், கோஷ்ட மூர்த்திகளாக, ஸ்ரீ மஹாவிஷ்ணு, தட்சிணா மூர்த்தி, ஸ்ரீ துர்கா ஆகியோர்கள் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஆக்கம் குருசாமி திரு P. சக்திவேல்
- சுபம் -